கோச்சடையானுக்காக விட்டுக்கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்!…

விளம்பரங்கள்

சென்னை:-வங்கியில் வாங்கிய 40 கோடி கடனுக்காக கடந்த 9ம் தேதியே வெளிவர வேண்டிய ‘கோச்சடையான்‘ வருகிற 23ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், 40 கோடி கடன் என்றால் வட்டியையும் சேர்த்து இப்போது கிட்டத்தட்ட 60 கோடியை தொட்டு விட்டது என்கிறார்கள்.இந்த தொகையை வங்கிக்கு செலுத்தினால் மட்டும் அப்படத்தை வெளியிட முடியும் என்கிற இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமானுக்கும் பல கோடிகள் கொடுக்க வேண்டியுள்ளதாம். ரஜினி படம் என்பதால் ஹாலிவுட்டில் முகாமிட்டிருந்தபடியே இசைப்பணிகளை முடித்து விட்ட ஏ.ஆர்.ரகுமான் தனது கையில் இருந்து பணத்தை போட்டு இசைப்பணிகளை செய்திருக்கிறாராம்.அதனால் அவருக்கும் ஒரு தொகை கொடுத்தால்தான் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்கிற இன்னொரு இக்கட்டான சூழ்நிலையும் கோச்சடையானுக்கு இருந்து வந்தது.

இது சம்பந்தமாக கோச்சடையான் டைரக்டர் சௌந்தர்யா ஏ.ஆர்.ரகுமானை தொடர்பு கொண்டு பேசினாராம். அப்போது தேவையானால் மொத்த சவுண்ட் ட்ராக்கையும் தருகிறேன் முதலில் படத்தை ரிலீஸ் பண்ணுங்கள்.எனக்கு தர வேண்டிய தொகையை பின்னர் கொடுத்து விடுங்கள் என்று பெரிய மனதுடன் சொல்லிவிட்டாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: