செய்திகள்,திரையுலகம் ஊனமுற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய லட்சுமிராய்!…

ஊனமுற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய லட்சுமிராய்!…

ஊனமுற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய லட்சுமிராய்!… post thumbnail image
சென்னை:-நடிகை லட்சுமிராய் தனது பிறந்த நாளை ஊனமுற்ற குழந்தைகளுடன் கொண்டாடினார். கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாலவிகார் இல்லத்துக்கு சென்ற அவர் அங்குள்ள மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மத்தியில் ‘கேக்‘ வெட்டினார்.

பிறகு ஒவ்வொரு குழந்தைக்கும் கேக் ஊட்டி விட்டார். இனிப்பு மற்றும் உதவிகளும் வழங்கினார்.லட்சுமிராய் தற்போது இரு மலையாள படங்களில் பிசியாக நடிக்கிறார். இரும்புக்குதிரை, அரண்மனை போன்ற தமிழ் படங்களிலும் நடிக்கிறார்.

ஒரு கன்னட படம், ஒரு தெலுங்கு படமும் கைவசம் உள்ளது. பிறந்த நாள் கொண்டாடிய லட்சுமிராய்க்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவித்தனர். ரஜினிகாந்தும் போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி