செய்திகள்,திரையுலகம் நயன்தாராவை கொஞ்சும் சிம்பு!…

நயன்தாராவை கொஞ்சும் சிம்பு!…

நயன்தாராவை கொஞ்சும் சிம்பு!… post thumbnail image
சென்னை:சிம்பு, நயன்தாரா இருவரும் பாண்டிராஜ் இயக்கும் ‘இது நம்ம ஆளு’படத்தில் சேர்ந்து நடிக்கின்றனர். அவர்கள் நடித்த காட்சி ஏற்கனவே படமாக்கப்பட்டது. தற்போது நயன்தாராவை சிம்பு கொஞ்சும் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. இப்படத்தில் இருவருக்கும் ஏற்பட்ட சந்திப்பு நெருக்கத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.

இருவரும் சேர்ந்து டேட்டிங் செய்யும் அளவுக்கு நெருங்கி இருக்கின்றனர். சமீபத்தில் சென்னையில் நடந்த நடிகை திரிஷாவின் நள்ளிரவு பர்த்டே பார்ட்டியில் இருவரும் கலந்துகொண்டனர். அப்போது சிம்புவின் நெஞ்சில் சாய்ந்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் நயன்தாரா.இந்நிலையில் இருவரும் கொஞ்சும் காட்சியை பாண்டிராஜ் படமாக்க முடிவு செய்தார். விரசம் எதுவும் இல்லாத கவிதைத்துவமான காட்சிதான். இருந்தாலும் அதிக டெக்னீஷியன்கள் வேண்டாம் என நயன்தாரா கேட்டுக்கொண்டதால், குறைவான டெக்னீஷியன்களை கொண்டே இந்த காட்சி படமாக்க முடிவு செய்யப்பட்டது.

காட்சிக்காக கேமரா தயாரானபோது இருவரும் எப்படி நடிக்கப்போகிறார்கள் என்பதை பார்க்க பாண்டிராஜ் உள்பட பட டெக்னீஷியன்கள் அனைவரும் ஆவலுடன் இருந்தனர். கேமரா ஓடத்தொடங்கியதும் நயன்தாரா,சிம்பு காட்சியில் ஒன்றிப்போய் நடிக்க ஆரம்பித்தார்கள். ஒரே டேக்கில் இந்த காட்சி ஓகே ஆனது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி