செய்திகள்,திரையுலகம் நடிகை நமீதா பிளஸ் 2 தேர்வில் வெற்றி!…

நடிகை நமீதா பிளஸ் 2 தேர்வில் வெற்றி!…

நடிகை நமீதா பிளஸ் 2 தேர்வில் வெற்றி!… post thumbnail image
கேரளா:-மலையாள சினிமா நடிகை நமீதா. இந்த வருடம் பிளஸ் 2 தேர்வு எழுதி இருந்தார். திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்த நடிகை நமீதா பிளஸ் 2 தேர்வில் அனைத்து பாடங்களிலும் ‘ஏ பிளஸ்’ தகுதியுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவர் கடந்த வருடம் பிளஸ் 1 தேர்விலும் அதிக மார்க் எடுத்து இருந்தார். பிரபல மலையாள டைரக்டர் சத்யன் அந்திகாடு டைரக்ஷனில் முதன் முதலாக சினிமா உலகில் காலடி எடுத்து வைத்த நடிகை நமீதா, நடிகர்கள் திலீப், குஞ்சாகோபன் ஆகியோர் படங்களிலும் நடித்துள்ளார்.பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றது பற்றி நடிகை நமீதா கூறும்போது, பிளஸ் 2 தேர்வில் இவ்வளவு மார்க் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. தொடர்ந்து பி.ஏ. படிக்க விரும்புகிறேன்.என கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி