செய்திகள்,விளையாட்டு ஐ.பி.எல்:ராஜஸ்தான் அணியை வென்றது சென்னை!…

ஐ.பி.எல்:ராஜஸ்தான் அணியை வென்றது சென்னை!…

ஐ.பி.எல்:ராஜஸ்தான் அணியை வென்றது சென்னை!… post thumbnail image
ராஞ்சி:-ஐ.பி.எல் கிரிக்கெட் நேற்றைய லீக் ஆட்டத்தில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதின.ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அங்கித் சர்மாவும், வாட்சனும் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அடித்து ஆடினர். மோகித் ஷர்மா வீசிய ஆட்டத்தின் 4வது ஓவரில் தொடர்ந்து இரு பவுண்டரிகள் விரட்டி அங்கித் சர்மா அசத்தினார். ஆட்டத்தின் 8வது ஓவரில் அணியின் ஸ்கோர் 60 ஆக இருக்கும் போது 30 ரன்கள் எடுத்திருந்த அங்கித் சர்மா அஷ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ரகானே 4 ரன்னில் ரன் அவுட்டாகி நடையை கட்டினார்.

ஆட்டத்தின் 13வது ஓவரில் அணியின் ஸ்கோர் 99 ரன்கள் என்றிருந்த நிலையில் 51 ரன்கள் எடுத்திருந்த வாட்சன் மோகித் சர்மா பந்துவீச்சில் போல்டானார். அதன் பின் வந்த நாயரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஸ்டுவர்ட் பின்னி மட்டும் சிறிது நேரம் களத்தில் நின்று 22 ரன்கள் குவித்து அவுடடானார். மற்ற வீரர்களான ஸ்மித் 9 ரன்னிலும், பால்க்னர் 1 ரன்னிலும், பாட்டியா 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
7வது விக்கெட்டுக்கு களமிறங்கிய யாக்னிக் 4 ரன்னிலும், 9வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கூப்பர் ரன் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது.வெற்றிக்கு 149 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி சென்னை அணி தனது இன்னிங்சை துவக்கியது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக டுவெய்ன் ஸ்மித்தும், மெக்கல்லமும் களமிறங்கினர்.

ஆட்டத்தின் 3வது ஓவரில் மெக்கல்லம் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ரெய்னா 2 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அதிரடியாக ஆடி வந்த ஸ்மித் 35 பந்துகளில் 44 ரன்கள் குவித்து கூப்பர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய டு பிளெசிஸ் அடித்து ஆடி ரன்களை சேர்த்தார். எனினும் இவருடன் ஜோடி சேர்ந்த அஸ்வின் 14 ரன்னில் அவுட்டானார். டு பிளெசிசும் 38 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் கேப்டன் டோனியும், ரவீந்திர ஜடேஜாவும் முறையே 26 மற்றும் 11 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதியில் 19.4 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 149 ரன் குவித்து சென்னை அணி வெற்றி பெற்றது.

RAJ – Inning

Batsman R B M 4s 6s S/R
Sharma A. c Smith D. R. b Ashwin R. 30 27 32 4 1 111.11
Watson S. b Sharma M. 51 36 53 3 4 141.67
Rahane A. run out Jadeja R. 4 7 12 0 0 57.14
Nair K. b Badree S. 8 11 22 1 0 72.73
Binny S. c Du Plessis F. b Jadeja R. 22 17 29 0 2 129.41
Smith S. b Sharma M. 9 8 8 1 0 112.50
Faulkner J. b Jadeja R. 1 4 6 0 0 25.00
Yagnik D. not out 4 6 14 0 0 66.67
Bhatia R. c Smith D. R. b Sharma M. 7 4 6 1 0 175.00
Cooper K. not out 0 0 6 0 0 0
Extras: (w 8, b 1, lb 3) 12
Total: (20 overs) 148 (7.4 runs per over)
Bowler O M R W E/R
Badree S. 3.6 0 19 1 5.28
Pandey I. 2.6 0 18 0 6.92
Sharma M. 3.6 0 31 3 8.61
Ashwin R. 3.6 0 39 1 10.83
Jadeja R. 3.6 0 18 2 5.00
Shankar V. 0.6 0 19 0 31.67

CHE – Inning

Batsman R B M 4s 6s S/R
Ashwin R. b Bhatia R. 14 16 24 1 0 87.50
Jadeja R. not out 11 6 15 0 1 183.33
Smith D. R. c Yagnik D. b Cooper K. 44 35 42 5 2 125.71
McCullum B. c Nair K. b Sharma A. 6 3 8 0 1 200.00
Raina S. c Bhatia R. b Sharma A. 2 3 8 0 0 66.67
Du Plessis F. b Faulkner J. 38 39 65 2 0 97.44
Dhoni M. not out 26 16 30 1 1 162.50
Extras: (w 5, lb 3) 8
Total: (19.4 overs) 149 (7.6 runs per over)
Bowler O M R W E/R
Sharma A. 3.6 0 20 2 5.56
Faulkner J. 3.4 0 37 1 10.88
Bhatia R. 3.6 0 30 1 8.33
Cooper K. 3.6 0 25 1 6.94
Tambe P. 3.6 0 34 0 9.44

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி