செய்திகள்,திரையுலகம் மூன்றாவது முறையாக இணையும் சூர்யா,முருகதாஸ்!…

மூன்றாவது முறையாக இணையும் சூர்யா,முருகதாஸ்!…

மூன்றாவது முறையாக இணையும் சூர்யா,முருகதாஸ்!… post thumbnail image
சென்னை :-சூர்யா நடித்த கஜினி, ஏழாம் அறிவு ஆகிய படங்களை இயக்கினார் முருகதாஸ். தற்போது இவர் விஜய், சமந்தா நடிக்கும் கத்தி படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வர உள்ளது.

அதேபோல சூர்யாவும், லிங்குசாமி இயக்கும் அஞ்சான் படத்தில் பிஸியாக உள்ளார். இப்படம் முடித்த கையோடு, வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார் சூர்யா. அந்தப் படம் முடிந்த பின்னர் முருகதாஸ் படத்தில் நடிக்கப் போகிறார்.இந்தப் படத்தை தெலுங்கில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்த பிரபல தயாரிப்பாளர் நல்லமலப்பு புஜ்ஜி தமிழ், தெலுங்கு எனும் இரு மொழிகளிலும் தயாரிக்கிறார்.

படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.கதாநாயகி உள்ளிட்ட மற்ற நடிகர்களின் தேர்வு இனிமேல்தான் நடைபெறும். இப்படத்தின் மூலம் சூர்யா,முருகதாஸ் கூட்டணி மூன்றாவது முறையாக இணைவது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி