செய்திகள்,திரையுலகம் சிம்புவை வெறுப்பேற்றும் நடிகை ஹன்சிகா!…

சிம்புவை வெறுப்பேற்றும் நடிகை ஹன்சிகா!…

சிம்புவை வெறுப்பேற்றும் நடிகை ஹன்சிகா!… post thumbnail image
சென்னை:-சிம்புவை காதலித்து பின்னர் அவரை பிரிந்தபோது பிரபுதேவாவுடன் இனைந்து சிம்புவை நயன்தாரா சிலகாலம் வெறுப்பேற்றினார்.அதைபோல் அதற்கும் ஹன்சிகாவும் சிம்புவை அவரை வெறுப்பேற்றி வருகிறார்.

சிம்புவுக்கு எந்தெந்த நடிகர்களெல்லாம் பிடிக்காதோ அவர்களுடனெல்லாம் அதிக நெருக்கம் காட்டி வருகிறார்.சேட்டையில் இணைந்த ஆர்யாவுடன் சமீபகாலமாக செம லூட்டி அடிக்கிறார் ஹன்சிகா.தற்போது மீண்டும் அவருடன் மீகாமன் படத்தில் இணைந்திருப்பவர் ஹாயாக சுற்றிக்கொண்டு திரிகிறார்.படப்பிடிப்பு தளத்தில் எந்நேரமும் ஒரே கூத்தும் கும்மாளமுமாகத்தான் இருக்கிறார்களாம்.

சில நாட்களில் இரவு படப்பிடிப்பு என்றால் கேரவனுக்குள் சென்று குட்டித்தூக்கம் போடாமல் ஸ்பாட்டில் அனைவர் முன்னிலையிலும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தபடி தூங்கி விழுகிறார்களாம். அப்படி தான் ஆர்யா மீது சாய்ந்து கிடப்பதை தனது உதவியாளர்களை வைத்து செல்போனில் கிளிக் செய்ய வைத்து, அதை தனது டுவிட்டரிலும் வெளியிடுகிறார்.சிம்புவை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காகவே அப்படி செய்கிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி