செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு இந்திய அணிக்கு கேப்டனாகும் அஷ்வின்?…

இந்திய அணிக்கு கேப்டனாகும் அஷ்வின்?…

இந்திய அணிக்கு கேப்டனாகும் அஷ்வின்?… post thumbnail image
மும்பை:-ஏழாவது ஐ.பி.எல்.தொடர் ஜூன் 1ல் முடிகிறது. ஜூன் மாத கடைசியில் இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, 1959க்குப் பின் முதன் முறையாக, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.அடுத்து, ஆக. 25 முதல் செப். 5 வரை, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் செப்., 7ல் ஒரு ‘டுவென்டி–20’ போட்டியிலும் இந்திய அணி பங்கேற்கவுள்ளது.

இதற்கு முன் ஜூன் 15, 17 மற்றும் 19ல் நடக்கவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க இந்திய அணி வங்கதேசம் செல்கிறது. இத்தொடரில் கேப்டன் தோனி, விராத் கோஹ்லிக்கு ஓய்வு தரப்படுகிறது.இதனால், தமிழகத்தைச் சேர்ந்த அஷ்வின் அல்லது மும்பையின் ரோகித் சர்மா இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் படேல் கூறுகையில் தற்போது டுவென்டி 20 போட்டிகளில் மட்டுமே, இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர். இரண்டரை மாதத்துக்கும் அதிகமான நாட்கள் கொண்ட இங்கிலாந்து தொடருக்கு முன் சற்று பயிற்சி எடுக்கும் வகையில் வங்கதேசம் சென்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளனர். இதில் சில புதிய வீரர்களை சோதித்து பார்க்கவுள்ளோம் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி