செய்திகள்,விளையாட்டு ஸ்பெயின் பார்முலா 1 கார் பந்தய போட்டியில் ஹாமில்டன் வெற்றி!…

ஸ்பெயின் பார்முலா 1 கார் பந்தய போட்டியில் ஹாமில்டன் வெற்றி!…

ஸ்பெயின் பார்முலா 1 கார் பந்தய போட்டியில் ஹாமில்டன் வெற்றி!… post thumbnail image
பார்சிலோனா:-இந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 19 சுற்றுகளாக நடக்கிறது. இதன் 5வது சுற்றான ஸ்பெயினிஷ் கிராண்ட்பிரி, பார்சிலோனா நகரில் நேற்று நடந்தது.

இதில் முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட இங்கிலாந்து வீரர் லிவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) முதலிடத்தை பிடித்தார். அவர் பந்தய தூரத்தை 1 மணி 41 நிமிடம் 05.155 வினாடிகளில் எட்டினார். இந்த சீசனில் அவர் தொடர்ச்சியாக பதிவு செய்த 4வது வெற்றி இதுவாகும்.முதலிடம் பிடித்ததால் 25 புள்ளிகளை தட்டிச் சென்றார். அதே சமயம் தொடர்ந்து 4வது முறையாக ஜெர்மனியின் நிகோ ராஸ்பர்க் (மெர்சிடஸ் அணி) 2வதாக வந்தார். ஹாமில்டனை விட வெறும் 0.6 வினாடி மட்டுமே பின்தங்கிய அவருக்கு 18 புள்ளிகள் கிடைத்தன.

ஆஸ்திரேலியாவின் டேனியல் ரிச்சியார்டோ 3வதாகவும், 4 முறை சாம்பியனான ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் 4வதாகவும் வந்தனர். இந்திய தொழிலதிபர்களுக்கு சொந்தமான போர்ஸ் இந்தியா அணியைச் சேர்ந்த செர்ஜி பெரேஸ் (மெக்சிகோ) 9வது இடத்தையும், நிகோ ஹல்கென்பர்க் (ஜெர்மனி) 10வது இடத்தையும் பெற்றனர்.இதுவரை நடந்த 5 சுற்று முடிவில் ஹாமில்டன் 100 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி