செய்திகள் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்றுநோய்?…

பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்றுநோய்?…

பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்றுநோய்?… post thumbnail image
டாக்கா:-வங்கதேசத்தை சேர்ந்த பிரபல எழுத்தாளர் ‘தஸ்லிமா நஸ்ரின்‘ (வயது 51). இவர் எழுதிய லஜ்ஜா நாவல் கடும் சர்ச்சையில் சிக்கியதை தொடர்ந்து, வங்கதேசத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டார். தற்போது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசித்து வரும் தஸ்லிமா நஸ்ரின், கோடை விடுமுறைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

அங்கு கடுமையான பனி மற்றும் இருமலால் அவதிப்பட்ட அவர் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு சிகிச்சைக்காக சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவருடைய மார்பு பகுதியில் பெரிய கட்டி ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர். உடனே அவருக்கு கேன்சர் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவு இன்று கிடைக்கும் என தெரிகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தஸ்லிமா மிகுந்த சோகத்தில் உள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் இணையதளத்தில் கூறுகையில், பிரியமுள்ள இந்தியர்களே, எனக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டால், இதனால் நான் இறந்தால், தயவு செய்து எனது பூனை மினுவை பார்த்துக் கொள்ளுங்கள். உலகிலேயே மிகச்சிறந்த பூனை அது என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி