செய்திகள் பிரசவத்திற்கு 3 நாட்கள் முன்பு 215 பவுண்டு எடை தூக்கி சாதனை புரிந்த பெண்!…

பிரசவத்திற்கு 3 நாட்கள் முன்பு 215 பவுண்டு எடை தூக்கி சாதனை புரிந்த பெண்!…

பிரசவத்திற்கு 3 நாட்கள் முன்பு 215 பவுண்டு எடை தூக்கி சாதனை புரிந்த பெண்!… post thumbnail image
அரிசோனா:-அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்தவர் மேகன் அம்பிரெஸ் லெதர்மேன் (வயது 33). இவரது கணவர் சாடு (வயது 34). கர்ப்பிணியான மேகன் குழந்தை பிறப்பதற்கு இரு தினங்கள் முன்புவரை கடுமையான முறையில் பளு தூக்குதல் பயிற்சியை மேற்கொண்டுள்ளார். தினமும் பளு தூக்குதல், ஜிம்னாஸ்டிக்ஸ் போன்றவற்றை செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

வாரம் 4 முறை ஜிம்முக்கு போவதையும், நாள் ஒன்றுக்கு 3 மைல் தூரம் தனது செல்ல நாயுடன் நடை பயிற்சி மேற்கொள்வதையும் மற்றும் வாரம் ஒரு முறை 4 மைல் உயரத்திற்கு மலையேற்ற பயிற்சி மேற்கொள்வதையும் வழக்கம்போல் செய்து வந்தார். இவர் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு மருத்துவர் ஒப்புதல் அளித்துள்ளார். குடும்பத்தினர் மறுத்தாலும் அதனை பொருட்படுத்தாமல் தனது பயிற்சியை திறம்பட செய்து வந்துள்ளார்.அவர் தனது கர்ப்ப காலத்தின் 40வது வாரத்தில் பிரசவம் ஆவதற்கு 3 தினங்களுக்கு முன்பு வரை பளு தூக்குதல் பயிற்சியை மேற்கொண்டு அன்றைய தினம் 215 பவுண்டுகள் எடையினை தூக்கி புதிய சாதனையை படைத்துள்ளார்.

இதனால் அவரது உடற்திறன் அதிகரித்துள்ளது. மருத்துவர் அவருக்கு சொன்ன பிரசவ காலம் நெருங்கும்போது, அவரது பலம் அதிகரித்து இருந்தது. அவர் உற்சாகமாக இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவரது கணவரும், பளு தூக்குதல் பயிற்சியாளருமான சாடும் மேகனுக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.கடந்த மே 3ம் தேதி மேகனுக்கு 6.11 பவுண்டுகள் எடையுடன் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு புளோரன்ஸ் ஜெர்மைன் என பெயர் வைத்துள்ளனர். அவரது பிரசவம் எளிமையாக இருந்தது என்றும் தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும் மேகன் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி