செய்திகள் உணவை வீணாக்கினால் அபராதம் விதிக்கும் உணவகம்!…

உணவை வீணாக்கினால் அபராதம் விதிக்கும் உணவகம்!…

உணவை வீணாக்கினால் அபராதம் விதிக்கும் உணவகம்!… post thumbnail image
லண்டன்:-சுவிட்சர்லாந்து நாட்டின் டிசினோ பகுதியில் உள்ள லோசொனே நகரில் பட்ரிசியட்டா என்ற பிரெஞ்சு உணவகம் இயங்கி வருகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் ஜியோவன்னி டபுரோ என்பவர் இந்த உணவகத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

இங்கு வரும் வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் உணவை முழுவதும் சாப்பிடாமல் வீணாக்கி செல்வதைக் கண்ட அவர் இதற்கான ஒரு புதிய உத்தியைத் தற்போது கண்டறிந்துள்ளார்.அதன்படி, வாங்கும் உணவை தட்டில் மீதம் வைப்பவர்கள் தங்கள் பில் தொகையில் அபராதமாக கூடுதல் ஐந்து பிரான்க்குகளைக் கட்டவேண்டும் என்ற புதிய நடைமுறையை தபுரோ ஏற்படுத்தியுள்ளார்.

அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும் இது குறித்த அறிவிப்புகள் முன்னரே வெளியிடப்பட்டிருந்தது.உணவை வீணாக்கி வெளியில் கொட்டுவதைப் பார்க்க தனக்கு கஷ்டமாக இருந்தது என்று கூறும் டபுரோ தான் இது குறித்து மக்களுக்கு வலுவான ஒரு தகவலைத் தெரிவிக்கவேண்டும் என்று விரும்பியதாகக் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி