துபாயில் நடந்த சாலை விபத்தில் 10 இந்தியர்கள் பலி!…

விளம்பரங்கள்

துபாய்:-ஐக்கிய அரபுக் குடியரசின் தலைநகர் அபுதாபியிலிருந்து வடக்கே செல்லும் பிரதான சாலையில் நேற்று பயணித்துக் கொண்டிருந்த மினி பேருந்து ஒன்று முன்னால் சென்றுகொண்டிருந்த டிரக் ஒன்றின் பின்புறம் மோதியதில் தலைகீழாகக் கவிழ்ந்து ஐந்து கி.மீ தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டது.

அப்போது அதில் பயணித்துக் கொண்டிருந்த 27 தொழிலாளர்களில் இந்தியர்கள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். இதில் பலியானதாகத் தெரிவிக்கப்பட்ட 10 இந்தியர்களும் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்று அங்குள்ள இந்தியத் தூதரகத்தின் அதிகாரி தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மற்ற தொழிலாளர்கள் சிகிச்சைக்காக ரஷித் மற்றும் அல் பரஹா மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் இந்தியர்களும், வங்காளதேசத்தவர்களும் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்து முற்றிலுமாக சிதைந்து போனது.

.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: