செய்திகள்,திரையுலகம் பாலைவன திமிங்கலம் (2014) திரை விமர்சனம்…

பாலைவன திமிங்கலம் (2014) திரை விமர்சனம்…

பாலைவன திமிங்கலம் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
அழகான தீவு ஒன்றுக்கு மேயராக நாயகன் ஜிம்மியின் அப்பா.தன்னுடைய தீவில் வாழும் மக்கள் எல்லோரும் வாழ நல்ல வருமானம் உள்ள தீவாக மாற்ற வேண்டும் என்று நினைக்கும் தன்னுடைய அப்பாவின் கனவை நினைவாக்க ஜிம்மி தயாராகிறார். இதற்காக அந்த தீவில் மிகப்பெரிய பார்ட்டி ஒன்றை நடத்த முடிவெடுக்கிறார். அதன்மூலம் தங்களுடைய தீவை ஒரு மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக மாற்றி வருமானம் ஈட்டலாம் என நினைக்கிறான்.

ஆனால், அந்த தீவில் இருக்கும் போலீசார் இந்த பார்ட்டியை நடத்த எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த தீவில் மிகப்பெரிய சுறாக்கள் இருப்பதாகவும், அதனால், இந்த பார்ட்டியில் கலந்துகொள்ள வருபவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையென்றும் கூறுகிறார்கள். ஆனால், இதை ஜிம்மி ஏற்றுக்கொள்ள மறுக்கிறான்.இதற்காக இறந்த சுறாவை வாங்கிவந்து இந்த கடலில் இருந்த சுறாதான் என்று போலீசாரிடம் காட்டி பார்ட்டிக்கு பெர்மிஷன் கேட்கிறான். ஆனால், அதை பரிசோதிக்கும் டாக்டர் இது இந்த கடலில் வாழ்ந்த சுறா கிடையாது என்று உறுதிபடுத்தி பார்ட்டி நடத்த அனுமதி வழங்க மறுக்கிறார்கள்.

ஒருநாள் அந்த தீவில் ஏற்படும் மின்சார பழுதை சரிசெய்யும் ஒருவரை சுறா வந்து கடித்துவிடுகிறது. அப்போது, சுறா மீது மின்சாரம் பாய்ந்து இறந்துவிடுகிறது. போலீசார் சொன்ன சுறா இறந்துவிட்டது. ஆகையால் இனி பார்ட்டி நடத்தலாம் என அதற்கான ஏற்பாடுகளை ஜிம்மி செய்கிறார். பார்ட்டியும் தொடங்குகிறது.ஆனால், இறந்தது ஒரு சிறிய சுறாதான். அதைப்போல் பலமடங்கு பெரிதான பல சுறாக்கள் அந்த கடலில் வசித்து வருகின்றன என்ற விஷயம் டாக்டருக்கும், போலீசாருக்கும் தெரியவருகிறது. இவர்கள் சுதாரிப்பதற்குள், அந்த சுறாக்கள் எல்லாம் வந்து பார்ட்டியில் கலந்துகொள்பவர்களை தாக்குகிறது. இதில் பலர் இறக்கின்றனர்.பல பேருடைய சாவுக்கு தாமே காரணமாகிவிட்டோம் என்று வேதனையில் துடிக்கும் நாயகன் ஜிம்மி, அந்த சுறாக்களை எல்லாம் கொல்ல முடிவெடுக்கிறான்.

இறுதியில் அந்த சுறாக்களை கொன்று மீதமிருந்த மக்களை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.கடலில் ஒரு சுறா எப்படி நீந்திச்செல்லுமோ அதேபோல் மணலிலும் செல்லக்கூடிய அளவுக்கு ஒரு சுறாவை வடிவமைத்து, வித்தியாசமான சிந்தனையுடன் இந்த படத்தை எடுத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள். சுறா என்றால் அது கடலுக்குள் மட்டும்தான் எதிரிகளை தாக்கும். மணலுக்குள் இவ்வளவு ஆக்ரோஷத்துடன் வந்து தாக்குமா. என பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். குறைவான கதாபாத்திரங்களை, குறைந்த பட்ஜெட்டில் படத்தை எடுத்திருக்கிறார்கள். கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் ‘பாலைவன திமிங்கலம்’ வேட்டை…….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி