மாயமான மலேசிய விமானத்தை கடத்திய வேற்று கிரகவாசிகள்?…

விளம்பரங்கள்

வாஷிங்டன்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8ம் தேதி மாயமானது.இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.ஆஸ்திரேலியா,அமெரிக்க போர் விமானங்கள்,போர்கப்பல்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் மாயமான விமானம் குறித்து அமெரிக்காவில் சிஎனென் ஓஆர்சி நிறுவனங்கள் பொதுமக்களிடம் ஒரு சர்வே எடுத்தது. இந்த சர்வேயில் சில அதிர்ச்சிகரமான முடிவுகளும் கூறப்பட்டுள்ளன. அமெரிக்காவில் சர்வேயில் கலந்து கொண்ட ஒருவர் விமானம் மாயமானதற்கு வேற்றுகிரகவாசிகள்தான் காரணம் என பதிலளித்துள்ளனர்.

மாயமான விமானத்தை தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என பலர் கூறியுள்ளனர்.மேலும் சிலர் விமானம் கடலில் விழுந்திருப்பதாக தாங்கள் நம்பவில்லை என்றும், விமானத்தை பைலட்டுகள் கடத்தியிருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.79 சதவீத அமெரிக்கர்கள் விமானத்தில் உள்ளவர்கள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என கூறி உள்ளனர். 9 சதவீதம் பேர் வேற்று கிரகவாசிகள் கடத்தி இருக்கலாம் என கூறி உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: