செய்திகள்,திரையுலகம் மகன் நடிக்கும் படத்தை இயக்குகிறார் விஜயகாந்த்!…

மகன் நடிக்கும் படத்தை இயக்குகிறார் விஜயகாந்த்!…

மகன் நடிக்கும் படத்தை இயக்குகிறார் விஜயகாந்த்!… post thumbnail image
சென்னை:-விஜயகாந்தின் இரண்டாவது வாரிசான சண்முக பாண்டியன், சகாப்தம் எனும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். வல்லரசு படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய, சந்தோஷ் குமார் இந்த படம் மூலம் இயக்குனர் ஆகிறார்.

விஜயகாந்த் இப்படத்தை தயாரிக்கிறார். சில மாதங்களுக்கு முன்னர் தனது இல்லத்திலேயே இப்படத்தின் பூஜையை வெகு விமரிசையாக நடத்தினார் விஜயகாந்த். இதில் ஏராளமான திரையுலகினரும் கலந்து கொண்டு சண்முக பாண்டியனை வாழ்த்தினர். இப்படத்தின் கதை, குடும்பம், காதல், சென்டிமென்ட் என்று அத்தனை அம்சங்களையும் கொண்டுள்ள படமாக உருவாக இருக்கிறது.

தன் மகனின் முதல் படம் என்பதால், ஒவ்வொரு காட்சியும் நன்றாக வர வேண்டும் என்பதற்காக விஜயகாந்த்தே படத்தின் முழு கதை விவாதத்திலும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி வந்தவர், இப்போது படத்தின் முதற் பகுதியை அவரே இயக்கவும் உள்ளாராம்.தன் மகனின் முதல்படத்தை எப்படியேனும் ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்பதற்காக விஜயகாந்த் இந்தளவுக்கு மெனக்கெடுகிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி