தமிழில் வெளியாகும் காட்ஸிலா 2014!…

விளம்பரங்கள்

சென்னை:-அமெரிக்காவில் காட்ஸிலா 2014 என்ற பெயரில் புது படம் தயாராகியுள்ளது. 160 மில்லியன் டாலர் செலவில் இப்படத்தை எடுத்துள்ளனர். வார்னர் பிரதர்ஸ் தயாரித்து உள்ளது. தற்போதைய கால கட்டத்தின் பின்னணியில் காட்ஸிலாவின் பூர்வீகத்தை பற்றி ஆராயும் திரைக்கதையில் இப்படம் உருவாக்கப்பட்டு உள்ளது.

உலகின் மிக பயங்கரமான அசுர வடிவிலான மிருகம் காட்ஸிலா. மனித குலத்தின் விபரீத ஆராய்ச்சியால் சில விசித்திர விலங்கினங்கள் தறிகெட்டு திரிய ஆரம்பிக்கின்றன. அவற்றுக்கும் காட்ஸிலாவுக்கும் போர் மூண்டால் எத்தகு விளைவுகள் ஏற்படும் என்பதே கதை. பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகளுடன் இப்படத்தை எடுத்துள்ளனர்.

ஆரோன்டெய்லர் ஜான்சன், கென்வடனபே, எலிசபெத் ஓல்சன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். கேரத் எட்வர்ட்ஸ் இயக்கியுள்ளார். வருகிற 16ம் தேதி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இப்படம் வெளியாகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: