செய்திகள்,திரையுலகம் ‘ஸ்பைடர்மேன் 2’ படம் புதிய சாதனை!…

‘ஸ்பைடர்மேன் 2’ படம் புதிய சாதனை!…

‘ஸ்பைடர்மேன் 2’ படம் புதிய சாதனை!… post thumbnail image
சென்னை:-‘ஸ்பைடர்மேன் 2’ படம் கடந்த 2ம் தேதி இந்தியா முழுவதும் ரிலீசானது.தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது. மொத்தம் 1523 தியேட்டர்களில் வெளியிட்டு உள்ளனர்.

இதுவரை 4 நாட்களில் இந்தியாவில் மட்டும் மொத்தம் ரூ.42 கோடி வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக சோனி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் கெர்சிதரு வாலா தெரிவித்துள்ளார். இதுவரை வந்த ‘ஸ்பைடர்மேன்’ படங்களில் இதுதான் சிறந்த படம் என்று ரசிகர்கள் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

காதலுக்கும், பொறுப்புகளுக்கும் இடையில் சிக்கி தவிக்கும் ஸ்பைடர் மேனின் போராட்டமே கதை. ஆண்ட்ரூ கார்பீல்டு, டேன் டிஹான் நடித்துள்ளனர். மார்க் வேப் இயக்கியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி