செய்திகள்,திரையுலகம் தமிழகம் முழுவதும் 500 தியேட்டர்களில் வெளியாகும் ‘கோச்சடையான்’!… இன்று முன்பதிவு தொடங்கியது…

தமிழகம் முழுவதும் 500 தியேட்டர்களில் வெளியாகும் ‘கோச்சடையான்’!… இன்று முன்பதிவு தொடங்கியது…

தமிழகம் முழுவதும் 500 தியேட்டர்களில் வெளியாகும் ‘கோச்சடையான்’!… இன்று முன்பதிவு தொடங்கியது… post thumbnail image
சென்னை:-ரஜினி நடித்த ‘கோச்சடையான்‘ வெள்ளிக்கிழமை ரிலீசாகிறது. தமிழகம் முழுக்க சுமார் 500 தியேட்டர்களிலும், சென்னையில் மட்டும் 35 தியேட்டர்களிலும் ரிலீசாகிறது.

சென்னையில் சத்யம், சாந்தம், செரீன், எஸ்கேப் 1,2,3, ஐநாக்ஸ் 1,2,3, தேவி, தேவி பேரடைஸ், உட்லண்ட்ஸ், உட்லண்ட்ஸ் சிம்பொனி, சாந்தி, ஆல்பட், அபிராமி 7 ஸ்டார், அன்னை அபிராமி, சொர்ண சக்தி அபிராமி, ரோபோ பால அபிராமி, பிவிஆர் 1,2,3, கமலா, கமலா ஸ்கிரீன் 2, எஸ்2 (பெரம்பூர்) 1,2,3, ஏவிஎம் ராஜேஸ்வரி, உதயம், சூரியன், சந்திரன், சைதை ராஜ், ஐட்ரீம், மகாராணி, பாரத் ஆகிய தியேட்டர்களில் ரிலீசாகிறது.

எல்லா தியேட்டர்களிலும் 4 காட்சிகள் திரையிடப்படுகிறது. இதுதவிர பல தியேட்டர்கள் ரசிகர் மன்ற சிறப்பு காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளது.ரிலீசாகும் அனைத்து தியேட்டர்களிலும் இன்று முதல் முன்பதிவு தொடங்கியது, சத்யம், தேவி, அபிராமி, ஐ நாக்ஸ் போன்ற மால் தியேட்டர்களில் ரசிகர்கள் காலையிலேய குவிந்து முன்பதிவு செய்து வருகிறார்கள். ஆன்லைன் முன்பதிவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி