செய்திகள்,திரையுலகம் சுதீப் ஜோடியாக கன்னடத்தில் அறிமுகமாகும் வரலட்சுமி!…

சுதீப் ஜோடியாக கன்னடத்தில் அறிமுகமாகும் வரலட்சுமி!…

சுதீப் ஜோடியாக கன்னடத்தில் அறிமுகமாகும் வரலட்சுமி!… post thumbnail image
சென்னை:-‘போடா போடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வரலட்சுமி. இப்படத்தை தொடர்ந்து விஷாலுடன் இணைந்து ‘மதகஜராஜா’ படத்தில் நடித்தார். அந்த படம் பல்வேறு பிரச்சினைகளால் வெளிவர முடியாத நிலையில் உள்ளது.

இந்நிலையில், வரலட்சுமி கன்னட சினிமாவில் கால்பதித்துள்ளார். கன்னடத்தில் உருவாகும் ‘மாங்கியா’ என்ற படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப்புடன் இணைந்து நடிக்கவுள்ளார். மேலும், இப்படத்தில் ரன்யா, ரம்யா கிருஷ்ணன், வி.ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘மிர்ச்சி’ என்ற படத்தின் ரீமேக் ஆகும். இதில் பிரபாஸ், அனுஷ்கா, ரிச்சா, சத்யராஜ், நதியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற படம் கன்னடத்திலும் வெற்றிபெறும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி