செய்திகள்,திரையுலகம் ‘கோச்சடையான்’ பட டிக்கெட் முன்பதிவு தொடங்கியவுடன் 3 நாள் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன!…

‘கோச்சடையான்’ பட டிக்கெட் முன்பதிவு தொடங்கியவுடன் 3 நாள் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன!…

‘கோச்சடையான்’ பட டிக்கெட் முன்பதிவு தொடங்கியவுடன் 3 நாள் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன!… post thumbnail image
சென்னை:-ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் நாளை மறுநாள் ரிலீசாகிறது. இப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை துவங்கியது.முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே 3 நாட்களுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் ரசிகர்கள் முண்டியடித்து ஆன்லைனில் முன்பதிவு செய்தார்கள். அனைத்து மாவட்டங்களிலும் ரசிகர்கள் காலையிலேயே தியேட்டர்களில் நீண்ட ‘கியூ’வில் நின்று டிக்கெட் முன்பதிவு செய்தனர்.

‘கோச்சடையான்’ உலகம் முழுவதும் 4 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் 540க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடுகின்றனர். கேரளாவில் 250 தியேட்டர்களிலும், கர்நாடகாவில் 150 தியேட்டர்களிலும் திரையிடப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, போஜ்புரி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வருகிறது. ‘கோச்சடையான்’ ரிலீசை ரஜினி ரசிகர்கள் விழாக்கோலமாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர். தியேட்டர்களில் ரஜினியின் முழு உருவ கட்அவுட்டுகள் வைத்துள்ளார்கள். கொடி தோரணங்கள், பேனர்களும் கட்டி உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி