அஞ்சானில் சூர்யா பேசும் பஞ்ச் டயலாக்!…

விளம்பரங்கள்

சென்னை:-சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்த படம் பாட்ஷா.பாட்ஷா படத்தை தழுவிய கதையாகத்தான் இப்போது சூர்யா நடிக்கும் படம் அஞ்சான் உருவாகியிருக்கிறது. முழுக்க முழுக்க மும்பையை மையமாகக்கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்து விட்டதால், இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், பாட்ஷாவில் ரஜினி பேசிய, ‘நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி’ என்ற பஞ்ச் டயலாக்கைப்போன்று அஞ்சான் படத்தில் சூர்யாவும் ஒரு டயலாக்கை அடிக்கடி பேசுகிறாராம். அந்த டயலாக் என்னவெனில், ‘நான் சாகுறதா இருந்தாலும் அதை நான்தான் முடிவு பண்ணனும், அதேசமயம் நீ சாகுறதா இருந்தாலும் அதையும் நான்தான் முடிவு பண்ணனும்’ என்பாராம். இந்த டயலாக் படத்தில் பல இடங்களில் இடம்பெறுகிறதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: