செய்திகள்,திரையுலகம் தமிழ்நாடு முழுவதும் 420 தியேட்டரில் வெளியாகும் ‘கோச்சடையான்’!…

தமிழ்நாடு முழுவதும் 420 தியேட்டரில் வெளியாகும் ‘கோச்சடையான்’!…

தமிழ்நாடு முழுவதும் 420 தியேட்டரில் வெளியாகும் ‘கோச்சடையான்’!… post thumbnail image
சென்னை:-ரஜினியின் ‘கோச்சடையான்‘ படம் வருகிற 9ம் தேதி ரிலீசாகிறது. தமிழ்நாடு முழுவதும் 420 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்படுகிறது. மேலும் தியேட்டர்கள் ஒதுக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் பேச்சு நடந்து வருகிறது.

சென்னையில் மட்டும் 39 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. அமெரிக்காவில் 200க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடுகின்றனர்.தமிழில் மட்டுமே 100 தியேட்டர்களில் அங்கு திரையிடப்படுகிறது. மற்ற தியேட்டர்களில் ஆங்கிலத்தில் ரிலீஸ் செய்கின்றனர்.

கோச்சடையான் படத்தை 3டியில் எடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 80 தியேட்டர்களில் 3டி தொழில் நுட்பத்தில் வெளியாகிறது.தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்பட 6 மொழிகளில் கோச்சடையான் படம் வெளியாகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி