செய்திகள்,திரையுலகம் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் பெயர்!…

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் பெயர்!…

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் பெயர்!… post thumbnail image
சென்னை:-‘வீரம்’ படத்தையடுத்து கெளதம் மேனன் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிரார் அஜித்.இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் டேன் மேகர்தர் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பாடலாசிரியர் தாமரை இப்படத்தின் வசனங்களை எழுதுவதாகக் கூறப்படுகிறது.இப்படத்திற்கு ‘ஆயிரம் தோட்டாக்கள்’ என தலைப்பிடப்பட்டதாக ஏற்னெவே தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்தப் படத்தில் அஜித் ‘சத்யதேவ்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் எனவே அவரது கதாபாத்திரத்தின் பெயரையே படத்தின் தலைப்பாக வைக்க கௌதம் மேனன் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி