இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது தாக்குதல்!…

விளம்பரங்கள்

லண்டன்:-இங்கிலாந்தின் ப்ரிமிங்ஹம் நகரில் வசிக்கும் ஓர் இந்திய வம்சாவழி குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அப்பகுதியில் உள்ள பிரபலமான இந்திய உணவு விடுதிக்கு சாப்பிட சென்றனர்.வீடு திரும்புவதற்காக காரில் ஏறும்போது, இரண்டு வாகனங்களில் வந்த 7 பேர் கொண்ட ஒரு கும்பல் அவர்களை சுற்றி வளைத்து, கண்மூடித்தனமாக தாக்கியது.

‘கிரிக்கெட் பேட்’, ‘பேஸ்பால் பேட்’, டயர்களை கழற்றும் இரும்பு லிவர் போன்ற கொலையாயுதங்களைக் கொண்டு அந்த கும்பல் நடத்திய இந்த அதிரடி தாக்குதலில் நிலை குலைந்துப் போன 2 பெண்கள் உள்பட 3 பேர் மரண பயத்தில் தலைதெறிக்க ஓடினர்.
அந்த மர்ம நபர்களிடம் சிக்கிக் கொண்ட ப்ரீத் பனேசர் கண்ணின் கருவிழி கலங்கிப் போன நிலையில், உடல் முழுக்க காயங்களுடன் எட்க்பாஸ்டனில் உள்ள ராணி எலிசபெத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது நண்பர் ஜக்தீப் சிரா மூட்டுகள் நொறுக்கப்பட்ட நிலையில் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தனது மனைவி மற்றும் ஜக்தீப்பின் சகோதரியுடன் இந்த தாக்குதலில் இருந்து தப்பியோடிய ப்ரீத் பனேசரின் அண்ணன் ஹர்தீப்(29) இச்சம்பவம் பற்றி கூறுகையில்,எங்களுக்கு யாருடனும் எந்தவித பகையோ, தகராறோ இல்லை.
நாங்கள் இங்கே அமைதியாக தொழில் செய்து கொண்டு, வாழ்ந்து வருகிறோம். எங்களை தாக்கிய மர்ம நபர்களில் யாரையும் இதற்கு முன்னர் நாங்கள் பார்த்ததே இல்லை. உணவகத்தின் உள்ளே நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அந்த ஏழு பேரில் ஒருவன் உள்ளே நுழைந்தான். எங்களை உற்றுப் பார்த்துவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

நாங்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியே வந்தபோது, மேலும் சிலருடன் வந்து எங்களை ஆவேசமாக தாக்கினான். இந்த சம்பவத்துக்கு பிறகு வீட்டை விட்டு வெளியே செல்லவே எனது மனைவி மிகவும் பயப்படுகிறாள் என்றார்.இந்த தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்ததும், சில நொடிகளில் வந்த போலீசார் சம்பவம் நடந்த உணவு விடுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்து, சந்தேகத்துக்குரிய சில்வர் நிற வாகனம் ஒன்றை தேடி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: