செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ரஜினியின் ‘லிங்கா’ படப்பிடிப்பை எதிர்த்து போராட்டம்!…

ரஜினியின் ‘லிங்கா’ படப்பிடிப்பை எதிர்த்து போராட்டம்!…

ரஜினியின் ‘லிங்கா’ படப்பிடிப்பை எதிர்த்து போராட்டம்!… post thumbnail image
பெங்களூர்:-மைசூரில் கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் தொடக்க விழா சாமுண்டேஸ்வரி மலைக் கோயிலில் நடைபெற்றது.படப்பிடிப்பை பிரபல கன்னட நடிகரும், அமைச்சருமான அம்பரீஷ் துவக்கி வைத்தார். லிங்கா திரைப்படத்தின் காட்சிகள், மைசூர், மண்டியா, மேல்கோட்டை மற்றும் ஸ்ரீரங்கபட்டணா ஆகிய இடங்களில் உள்ள இயற்கை எழில் மிகுந்த இடங்களில் படமாக்கப்பட உள்ளன.

மே 11ம் தேதி வரை படப்பிடிப்பு நடக்க உள்ளதால் ரஜினியும் அதுவரை மைசூரில் தங்கி படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள உள்ளார்.இந்நிலையில், காவிரி நதிநீர் விஷயத்தில் தமிழ்நாட்டிற்கு ஆதரவாக ரஜினி செயல்பட்டுள்ளார். ஆகவே, அவர் நடிக்கும் லிங்கா திரைப்பட படப்பிடிப்பை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நடத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கஸ்தூரி கர்நாடக ஜனபர வேதிகே சார்பில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.

ராம்நகரில் உள்ள ஐஜூர் சர்க்கிளில் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி, ரஜினியின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பிரபல கன்னட திரைப்பட தயாரிப்பாளரான ராக்லைன் வெங்கடேஷை கண்டித்தும் கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி