இரண்டே மாதத்தில் படத்தை முடித்து, தீபாவளியின் போது திரையிட துரித ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், ‘லிங்கா’ படத்தின் பூஜையுடன் கூடிய முதல் காட்சி படப்பிடிப்பு மைசூர் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சாமுண்டீஸ்வரி கோயிலில் தொடங்கியது.தற்போது இப்படத்தில் ரஜினியுடன் வடிவேலு இணைந்து நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே வடிவேலு ‘சந்திரமுகி’ படத்தில் இணைந்து நடித்தார். இதில் ரஜினி, வடிவேலு கூட்டணியில் காமெடி கலகலப்பாக அமைந்தது.
எனவே தற்போது ‘லிங்கா’ படத்திலும் காமெடி வேடத்தில் நடிக்க பேச்சு நடக்கிறது.வடிவேலு கதாநாயகனாக நடித்த தெனாலிராமன் ரிலீசாகி ஓடிக்கொண்டிக்கிறது. இந்நிலையில் திரும்பவும் ரஜினியின் லிங்கா படத்தில் காமெடியன் வேடம் ஏற்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி