சின்ன திரை,திரையுலகம் டுவிட்டரில் இணைந்தார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்!…

டுவிட்டரில் இணைந்தார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்!…

டுவிட்டரில் இணைந்தார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்!… post thumbnail image
சென்னை:-தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்கள் பலரும் ட்விட்டர் தளத்தில் இணைந்து வருகிறார்கள். ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட சில நடிகர்கள் மட்டுமே ட்விட்டர் தளத்தில் இணையாமல் இருந்தார்கள்.

கோச்சடையான்‘ திரைப்படம் வெளிவர இருக்கும் நிலையில் இன்று ரஜினிகாந்த் தன்னை ட்விட்டர் தளத்தில் இணைத்து கொண்டார். அவரது ட்விட்டர் முகவரி @superstarrajini.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,திரையுலகில் என்னுடைய வளர்ச்சி அதிசயமானது. அதற்கு என் ரசிகர்களே காரணம். சமூக வலைதளங்களின் வழியே என் ரசிகர்களோடு தொடர்பு கொண்டு, அவர்கள் சொல்வதை அறியவும், என்னுடைய கருத்துகளை அவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் விரும்பினேன்.என கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில், ரசிகர்கள் பெருமளவில் பின் தொடர்ந்து வருகிறார்கள். அறிக்கை வெளியிட்டத்தில் இருந்து நிமிடத்திற்கு 100க்கும் மேற்பட்டோர் பின்தொடருவது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி