நடிகர் ராகுலை மணந்தார் பாடகி சின்மயி!…

விளம்பரங்கள்

சென்னை:-‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.த்ரிஷா, சமந்தா, காஜல் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் பலருக்கும் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், இவருக்கும் ‘மாஸ்கோவின் காவிரி’, ‘விண்மீன்கள்’ போன்ற படங்களில் நடித்த ராகுல் ரவீந்திரனுக்கும் காதல் மலர்ந்தது. இவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் சம்மதம் சொன்னதையடுத்து, இன்று திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னையில் இவர்களது திருமணம் இன்று சிறப்பாக நடந்தது. இதில் இருவீட்டாரது உறவினர்கள் கலந்து கொண்டனர்.

நாளை திருமண வரவேற்பு நடக்கிறது. இதில் திரளான திரையுலகினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளனர்.தங்களது, திருமணத்திற்கு பரிசு பொருட்களோ, மலர் கொத்துகளோ வேண்டாம் என்று அன்பு கட்டளை போட்டுள்ள இந்த புதுமண தம்பதியர், அதற்கு பதிலாக அந்த பணத்தை லடாக்கில் உள்ள ஒரு பகுதியில் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு உதவ இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: