செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் மாயமான மலேசிய விமானப் பயணிகளுக்கு இறுதிச் சடங்கு!…

மாயமான மலேசிய விமானப் பயணிகளுக்கு இறுதிச் சடங்கு!…

மாயமான மலேசிய விமானப் பயணிகளுக்கு இறுதிச் சடங்கு!… post thumbnail image
கோலாலம்பூர்:-கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பயணிகளுடன் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கிளம்பிய ஒரு மணி நேரத்தில் மாயமாக மறைந்தது. ஆஸ்திரேலியாவின் தலைமையின் கீழ் எட்டு நாடுகள் விமானங்கள் மூலமாகவும், கப்பல்கள் மூலமாகவும் 50 நாட்களுக்கும்மேல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. இருப்பினும் பலன் எதுவும் கிட்டாத நிலையில் தேடுதல் வேட்டையை முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும், வரும் வாரங்களில் ஆழ்கடல் பகுதியில் தேடுதல் வேட்டையைத் தொடங்க தீர்மானித்துள்ளதாகவும் ஆஸ்திரேலியாவின் தேடுதல் ஒருங்கிணைப்பு மையம் கடந்த 30ம் தேதி தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து பீஜிங்கிலும், கோலாலம்பூரிலும் ஆதரவு மையங்களில் காத்திருக்கும் உறவினர்களை உண்மை நிலையை ஏற்றுக்கொள்ளுமாறும், ஆதரவு மையங்களை தாங்கள் மூட இருப்பதாகவும் மலேசிய அரசு அறிவித்துள்ளது.அந்நாட்டு துணை வெளியுறவுத்துறை அமைச்சரான ஹம்சா சைனுதின் காணமற்போன பயணிகளின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட உலக மக்கள் இதற்கான விடையை எதிர்பார்ப்பதாகவும், இதற்கான ஒரு அறிக்கை வெளிவர வேண்டிய தருணத்திற்காக அனைவரும் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.எனினும், பயணிகளின் உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஊர்களுக்குத் திரும்பச்சென்று இந்த பதில்களுக்காகக் காத்திருக்குமாறும் அவர் கூறினார்.

பீஜிங் மையத்தில் உள்ள சில குடும்பங்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பியுள்ள நிலையில் சிலர் வெளியேற மறுக்கின்றனர். சில பயணிகளின் உறுப்பினர்கள் இந்த வார இறுதியில் அவர்களுக்கான இறுதி சடங்குகளை செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.எட்டு வாரங்கள் கடந்த நிலையில் காணாமற்போன பயணிகளுக்காக நடத்தப்படும் முதல் சடங்கு நிகழ்வுகள் இவையாகும் என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி