செய்திகள்,திரையுலகம் இலியானாவுக்கு போட்டியாக நீச்சல் உடையில் கலக்கும் தமன்னா!…

இலியானாவுக்கு போட்டியாக நீச்சல் உடையில் கலக்கும் தமன்னா!…

இலியானாவுக்கு போட்டியாக நீச்சல் உடையில் கலக்கும் தமன்னா!… post thumbnail image
மும்பை:-நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன், லிப் டு லிப் முத்தம் தந்து நடிக்க மாட்டேன் என்று மறுத்து வந்தார் நடிகை தமன்னா.தற்போது இந்தியில் கவனம் செலுத்தி வரும் தமன்னா அங்குள்ள கடும் போட்டியை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார். கவர்ச்சியில் கலக்கினால்தான் வாய்ப்பு குவியும் என்று சிலர் அட்வைஸ் செய்தனர்.

இந்நிலையில் ‘து மேரா ஹீரோ’ படத்தில் நீச்சல் உடையில் நடித்து ரசிகர்களை கிறங்கடித்தார் இலியானா. இது தமன்னாவுக்கு ஷாக் தந்தது. இந்நிலையில் சாஜித் கான் இயக்கத்தில் ஹம்ஷக்கல்ஸ் என்ற படத்தில் தமன்னா நடிக்கிறார்.இதில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து ரசிகர்களை தமன்னா குஷிபடுத்த உள்ளதாக பாலிவுட் பத்திரிகைகள் பரபரப்பாக தகவல் வெளியிட்டன.

இதைப் பார்த்து அப்செட் ஆன தமன்னா,அப்படியெல்லாம் நான் நடிக்கவில்லை என்று மறுத்தார்.ஆனால் சமீபத்தில் ஹம்ஷக்கல்ஸ் படத்தின் டிரைலர் மற்றும் ஸ்டில்கள் வெளியிடப்பட்டன.இதில் கண்ணைக் கவரும் கலரில் டூ பீஸ் அணிந்து கடற்கரையில் தமன்னா நடந்து வரும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவர் நடித்து வரும் டோலிவுட் படங்களிலும் டூ பீஸ் அணிந்து நடிக்க கேட்டு இயக்குனர்கள் அவரை வற்புறுத்த தொடங்கி உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி