திக்விஜய்,அம்ருதா புகைப்படங்களை நீக்க இணையதளங்களுக்கு போலீஸ் கோரிக்கை!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான திக்விஜய் சிங்குக்கும், டி.வி.பெண் அறிவிப்பாளர் அம்ருதா ராய்க்கும் தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதுபற்றி திக்விஜய்சிங் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.

அம்ருதா ராயும், திக்விஜய்சிங்கும் கட்டி அணைத்தபடி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும் இண்டர்நெட்டில் வெளியாகி உள்ளது. இதைப் பார்த்த அம்ருதா ராய் அதிர்ச்சி அடைந்தார். இந்த படங்கள், வீடியோ அனைத்தும் அம்ருதா ராயின் இமெயிலில் இருந்தன. அதை யாரோ திருடி டவுண்–லோடு செய்து இண்டர்நெட்டில் பரவ விட்டுள்ளனர்.

இதுபற்றி அவர் டெல்லி குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தகவல் தொடர்பு குற்றச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இணையதளங்களில் வெளியிடப்பட்ட இருவரின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை நீக்குமாறு சமூக வலைதளங்களை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: