செய்திகள்,திரையுலகம் மும்பை இளைஞருடன் நடிகை தமன்னா காதல்?…

மும்பை இளைஞருடன் நடிகை தமன்னா காதல்?…

மும்பை இளைஞருடன் நடிகை தமன்னா காதல்?… post thumbnail image
மும்பை:-தன்னை அடிக்கடி சந்திக்கவரும், மும்பை இளைஞர் ஒருவருடன் நடிகை தமன்னா, காதல் வயப்பட்டிருப்பதாகவும்,அதன் காரணமாக, இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு, ஜாலி டூர் சென்று வருவதாகவும் பரபரப்பு செய்திகள் பரவியுள்ளன.

இந்த செய்தியை தமன்னா மறுத்துள்ளார். எனக்கு, நண்பர்கள் இருப்பது உண்மை தான். ஆனால், யார் மீதும் எனக்கு காதல் இல்லை. அதற்கு போதிய நேரம் இல்லை என்கிறார். மேலும், திருமணத்திற்கான நேரம் இன்னும் வரவில்லை. வரும்போது, நீங்கள் முடிவு செய்யும்
மாப்பிள்ளையை, திருமணம் செய்து கொள்கிறேன் என, பெற்றோரிடம் கூறி விட்டேன் என கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி