செய்திகள்,திரையுலகம் திருமண அறிவிப்பால் பட வாய்ப்பை இழக்கும் அமலாபால்!…

திருமண அறிவிப்பால் பட வாய்ப்பை இழக்கும் அமலாபால்!…

திருமண அறிவிப்பால் பட வாய்ப்பை இழக்கும் அமலாபால்!… post thumbnail image
சென்னை:-நடிகை அமலாபால் தமிழில் தனுஷ் ஜோடியாக ‘வேலை இல்லா பட்டதாரி’ மற்றும் பார்த்திபன் இயக்கும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படங்களில் நடிக்கிறார்.

ஒரு தெலுங்கு படம், ஒரு மலையான படமும் கைவசம் உள்ளன. மேலும் சில தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்து அட்வான்ஸ் தொகையும் கொடுத்திருந்தனர். இந்நிலையில் அமலா பாலுக்கும் டைரக்டர் விஜய்க்கும் ஜூன் 12ம் தேதி திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.அமலாபால் சில படங்களில் நடித்து வருவதாகவும் தனக்கும் சைவம் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டிய பணிகள் உள்ளது என்றும் விஜய் தெரிவித்தார். இதெல்லாம் முடிந்ததும் திருமணம் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் அமலாபாலை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாங்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி தரும்படி கேட்டு வருகிறார்கள்.

தெலுங்கு படத்தில் ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்கள், அப்படத்தில் இருந்து அமலாபாலை நீக்கி விட்டனர். அவருக்கு பதில் வேறு நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதுகுறித்து தயாரிப்பாளர் தரப்பில் கூறும் போது படத்துக்கு ஒப்பந்தம் செய்த போது அமலாபால் திருமணம் பற்றி எதுவும் கூறவில்லை. இப்போது திருமண அறிவிப்பை வெளியிட்டு இருப்பது எங்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்தோம். அதை ரத்து செய்து விட்டோம். அமலாபாலுக்கு பதில் வேறு நடிகை தேர்வாகியுள்ளார். அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்டுள்ளோம் என்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி