செய்திகள்,திரையுலகம் உலகில் கவர்ச்சியான 100 பெண்கள் பட்டியல்!…

உலகில் கவர்ச்சியான 100 பெண்கள் பட்டியல்!…

உலகில் கவர்ச்சியான 100 பெண்கள் பட்டியல்!… post thumbnail image
அமெரிக்கா:-அமெரிக்காவில் இருந்து வெளிவரும் எப்எச்எம் இதழ் உலகின் 100 கவர்ச்சியான பெண்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் ஹாலிவுட் நடிகை ஜெனீபர் லாரன்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இவர் கடந்த வருடம் எடுக்கப்பட்ட பட்டியலில் 20வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தனது வாசகர்களிடம் இருந்து பெற்ற வாக்குகளின் அடிப்படையில் உலகின் 100 கவர்ச்சியான பெண்களை தேர்வு செய்து அதன் முடிவை வெளியிட்டு உள்ளது. சென்ற வருடம் முதலிடம் பெற்று சாதனை படைத்த நடிகை மலியா குனிஷ் தற்போது கர்ப்பிணியாக இருந்தாலும், அவர் இந்த பட்டியலில் 6வது இடம் பிடித்து உள்ளார்.ஜெனிபர் லாரன்ஸை அடுத்து மிச்சலி கீகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

பிரிட்டனின் டாப் கவர்ச்சியான அழகி என்ற பட்டம் பெற்ற நடிகை ஹெலென் பிளங்கன், 14வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஹாலிவுட் நடிகையும் பாப் பாடகியுமான ரிஹானா மூன்றாவது இடத்தையும், அமெரிக்க மாடல் அழகி எமிலி ரடஜ் கொவ்ஷ்கி நான்காவது இடத்தையும் பெற்று உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி