தனுஷின் அனேகனை காப்பியடித்த லிங்குசாமி!…

விளம்பரங்கள்

சென்னை:-லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘அஞ்சான்‘. இப்படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கிறார்.படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிடும் முயற்சிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில்,மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தன்று அஞ்சான் படத்தின் பர்ஸ்ட் லுக், டைட்டில் லோகா ஆகியவற்றை வெளியிடுவதாக முன்பே அறிவித்திருந்த லிங்குசாமி, ஒருநாள் முன்னதாகவே அவற்றை வெளியிட்டார்.அவர் வெளியிட்ட அஞ்சான் என்ற டைட்டில் லோகோ பெருவாரியான ரசிகர்களை குழப்பியது.

சில மாதங்களுக்கு முன்பு கே.வி.ஆனந்த் வெளியிட்ட ‘அனேகன்‘ படத்தின் டைட்டில் லோகோவை போன்றே அஞ்சான் டைட்டிலும் இருந்ததுதான் காரணம். இதையடுத்து, சூர்யாவின் ரசிகர்கள் இதை அவரது கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார்களாம். அதனால், அஞ்சான் லோகோ விரைவில் மாற்றியமைக்கப்பட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: