செய்திகள்,திரையுலகம் மீண்டும் இணையும் பிரபு,குஷ்பூ ஜோடி!…

மீண்டும் இணையும் பிரபு,குஷ்பூ ஜோடி!…

மீண்டும் இணையும் பிரபு,குஷ்பூ ஜோடி!… post thumbnail image
சென்னை:-தர்மத்தின் தலைவன், மைடியர் மார்த்தாண்டன், சின்னதம்பி, சின்ன வாத்தியார், கிழக்குக்கரை, பாண்டித்துரை, தர்மசீலன் என பல படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் பிரபு,குஷ்பூ.பிரபல பத்திரிகைகளில் பிரபு,குஷ்பூவிற்கு ரகசிய திருமணம் நடந்து விட்டதாக செய்தி வெளியாகி, பெரும் சர்ச்சைக்குள்ளானது.

அதையடுத்து, பிரபு,குஷ்பூ இருவரும் இணைந்து நடிப்பதை நிறுத்திக்கொண்டனர்.திருமணத்திற்கு பிறகு அவ்வப்போது கேரக்டர் ரோல்களில் நடித்து வந்தபோதும், பிரபுவுடன் எந்த படத்திலும் குஷ்பூ இணைந்து நடிக்கவில்லை.எதிரும் புதிருமாக சென்று கொண்டிருந்த பிரபு,குஷ்பூ இருவரையும் மீண்டும் இணைக்கும் முயற்சியில் தற்போது ஒரு இயக்குனர் இறங்கியிருக்கிறார்.

அவர் முதலில் கதையை பிரபுவிடம் சொல்லி இதில் உங்களுக்கு ஜோடியாக நடிக்க குஷ்பூவிடம் பேசப்போகிறேன் என்று சொன்னபோது, அவர்கள் நடித்தால் நானும் நடிக்கத்தயார். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறிவிட்டாராம்.
அதையடுத்து இதுபற்றி குஷ்பூவிடம் பேசியபோது, கதையும், எனக்குரிய கேரக்டரும் பிடித்திருக்கிறது. அதனால் நான் நடிக்கிறேன் என்று ஒத்துக்கொண்டாராம்.நீண்ட இடைவேளைக்குப்பிறகு மீண்டும் பிரபு,குஷ்பூ ஜோடியாக சேர்ந்து நடிக்கப்போகிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி