செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் மாயமான மலேசியா விமானம் பற்றிய முதல் கட்ட அறிக்கை இன்று தாக்கல்!…

மாயமான மலேசியா விமானம் பற்றிய முதல் கட்ட அறிக்கை இன்று தாக்கல்!…

மாயமான மலேசியா விமானம் பற்றிய முதல் கட்ட அறிக்கை இன்று தாக்கல்!… post thumbnail image
பெர்த்:-கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8ம் தேதி மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுவதால், பல்வேறு நாடுகளின் கப்பல்கள் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.

விமானம் மற்றும் அதன் கறுப்பு பெட்டியை தேடும் பணியில், அமெரிக்காவின் புளூபின் 21 என்ற நீர்மூழ்கி ரோபோவும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. இந்த ரோபோ 14 முறை நீருக்குள் சென்று தகவல்களை சேகரித்து வந்தது. எனினும் விமானம் குறித்தோ, அதன் கறுப்பு பெட்டியை குறித்தோ எந்த தகவலும் கிடைக்கவில்லை.இந்நிலையில் விமானத்தை தேடும் பணி நடைபெறும் பகுதியில் மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், மாயமான விமானம் தொடர்பாக முதல் கட்ட அறிக்கையை இன்று மலேசியா வெளியீடுகிறது. இந்த தகவலை நிருபர்களிடம் தெரிவித்த போக்குவரத்து துறை அமைச்சர் ஹிசாமுதின் ஹிசான் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி