செய்திகள்,திரையுலகம் இன்று நடிகர் அஜித் பிறந்த நாள்!…

இன்று நடிகர் அஜித் பிறந்த நாள்!…

இன்று நடிகர் அஜித் பிறந்த நாள்!… post thumbnail image
அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் அஜித்.தொடர்ந்து காதல் கோட்டை, வான்மதி, உல்லாசம், காதல் மன்னன், அவள் வருவாளா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் ஆகிய வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் அவர் வாலி, தீனா, அமர்க்களம் ஆகிய படங்களில் நடித்து சாதனை படைத்தார்.

தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருது, எம்.ஜி.ஆர். திரைப்பட விருது, பிலிம்பேர் விருது போன்ற பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
அமர்க்களம் படத்தில் நடிக்கும் போது தனது ஜோடியாக நடித்த ஷாலினியை காதலித்த அஜித், பின் அவரை திருமணம் செய்துகொண்டார்.யார் உதவி என்று கேட்டாலும் அதை பற்றி விளம்பரப்படுத்தி கொள்ளாமல் அவர்களுக்கு தன்னாலான உதவிகளை செய்து வருபவர்.

எந்த சமயத்திலும் யாரையும் காயப்படுத்தக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்.இதுவரை அவர் 54 படங்கள் நடித்துவிட்டார். தற்போது அஜித்தின் 55வது படத்தை கெளதம் மேனன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அஜித் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி