செய்திகள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பிரிட்டன் ராணுவ நாய்க்கு விருது!…

தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பிரிட்டன் ராணுவ நாய்க்கு விருது!…

தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பிரிட்டன் ராணுவ நாய்க்கு விருது!… post thumbnail image
லண்டன்:-ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்ட சாஷா என்ற லேப்ரடார் வகை நாய்க்குட்டி தனது பராமரிப்பாளருடன் தாலிபான் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜுலை 24ந் தேதி கொல்லப்பட்டனர்.

தனது பராமரிப்பாளருடன் சேர்ந்து வீரர்கள் எப்படி பாதுகாப்பான வழியில் செல்வது, ஆயுதங்களை மற்றும் வெடிபொருள் சாதனங்களை மோப்பம் பிடிப்பது ஆகிய பணிகளில் சாஷா ஈடுபட்டிருந்தது. சாஷாவின் பல்வேறு மோப்ப நடவடிக்கைகள் தாலிபான்களுக்கு எதிரான போரில் ஈடுபட்ட வீரர்களுக்கு பெரும் ஊக்கத்தை தந்தது குறிப்பிடத்தக்கது.

காந்தஹார் பகுதிகளில் 15 முறை பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு சாதனங்களையும், ஆயுதங்களையும், பீரங்கிகளையும் கண்டுபிடித்து சாஷா சாதனை படைத்துள்ளது.சாஷாவின் இந்த சாதனையை கருத்தில் கொண்டே பிரிட்டன் அரசு தற்போது விக்டோரியா சிலுவையை விருதாக வழங்கி கவுரவிக்க உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி