செய்திகள்,திரையுலகம் சோலார் ஸ்டார், பவர் ஸ்டார் இணையும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’!…

சோலார் ஸ்டார், பவர் ஸ்டார் இணையும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’!…

சோலார் ஸ்டார், பவர் ஸ்டார் இணையும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’!… post thumbnail image
சென்னை:-சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’.படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதில் சந்தானத்துடன் இணைந்து ‘சோலார் ஸ்டார்’ ராஜகுமாரன் நடிக்கிறார்.நடிகை தேவயானியின் கணவர் ராஜகுமாரன் தான் சோலார் ஸ்டார்.

அவர் ஏற்கனவே திருமதி. தமிழ் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடிகர் சந்தானம், பவர் ஸ்டார் இணைந்து நகைச்சுவையில் கலக்கி இருந்தனர்.

அதற்குப் பிறகு பல சர்ச்சைகளில் பவர் ஸ்டார் சிக்கியதால் அவருக்கும் சந்தானத்திற்கும் பேச்சுவார்த்தையில்லை என்று கூறப்பட்டது. எனவே,வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சோலார் ஸ்டாரை ஒப்பந்தம் செய்து இருந்தார்.ஆனால் இந்த படத்தில் பவர் ஸ்டாரும் நடித்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி