செய்திகள்,திரையுலகம் வில்லன் நடிகர் நடித்த படம் பார்த்து ராணுவத்தில் சேர்ந்த இளைஞர்!…

வில்லன் நடிகர் நடித்த படம் பார்த்து ராணுவத்தில் சேர்ந்த இளைஞர்!…

வில்லன் நடிகர் நடித்த படம் பார்த்து ராணுவத்தில் சேர்ந்த இளைஞர்!… post thumbnail image
மும்பை:-துப்பாக்கி, பில்லா 2 படங்களில் வில்லனாக நடித்தவர் வித்யுத் ஜம்வால். இந்தியில் ‘கமாண்டோ‘ என்ற படத்தில் துணிச்சல் மிக்க கமாண்டோவாக நடித்துள்ளார். இப்படத்தை பார்த்து ராஜஸ்தான் இளைஞர் ஒருவர் ராணுவத்தின் கமாண்டோ பிரிவில் சேர்ந்தார்.

இதுபற்றி அந்த இளைஞர் வித்யுத்தின் இணைய தள பக்கத்தில் உருக்கமுடன் கடிதம் எழுதி இருந்தார்.அதில், ‘கமாண்டோ படத்தை பார்த்தபிறகு ராணுவ முகாம் சென்று கமாண்டோ பிரிவில் சேர்ந்தேன். 10 மாத டிரெய்னிங் தருணம். இதில் கடினமான பல பயிற்சிகள் உள்ளன. எல்லா பயிற்சிகளையும் முடித்தபிறகுதான் எனக்கு கமாண்டோ பிரிவில் சேர முடியும்.

அதற்காக ஒதுங்கி சென்றுவிடாமல் விடாப்பிடியாக பயிற்சிகளை முடித்தேன். தற்போது பாரா கமாண்டோ பிரிவில் இணைந்திருக்கிறேன். என்னை இந்த பணிக்கு ஊக்கப்படுத்தியது உங்களது நடிப்பு தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி