செய்திகள்,திரையுலகம் ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!…

ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!…

ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!… post thumbnail image
சென்னை:-ரஜினி நடித்த ‘கோச்சடையான்‘ படம் வருகிற 9ம் தேதி ரிலீசாகிறது.இந்த படத்துக்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அடுத்து நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்துக்கு ‘லிங்கா’ என்று பெயர் வைக்க பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.

லிங்கா என்பது ரஜினியின் பேரன் பெயர் ஆகும். படப்பிடிப்பு மைசூரில் துவங்கியுள்ளது. இதற்காக அங்கு அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் நடிப்பதற்காக ரஜினி மைசூர் புறப்பட்டு செல்கிறார். ஒரு மாதம் அங்கு தங்கி இருந்து நடிக்கிறார்.

இந்த படத்தில் ரஜினிக்கு இரண்டு வேடமாம். தந்தை, மகன் கேரக்டரில் வருகிறார். கதாநாயகியாக நடிக்க அனுஷ்காவும், இந்தி நடிகை சோனாக்சி சின்ஹாவும் தேர்வாகியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி