செய்திகள்,திரையுலகம் ‘கோச்சடையான்’ படம் மோடி பார்க்க சிறப்புக் காட்சி ஏற்பாடு!…

‘கோச்சடையான்’ படம் மோடி பார்க்க சிறப்புக் காட்சி ஏற்பாடு!…

‘கோச்சடையான்’ படம் மோடி பார்க்க சிறப்புக் காட்சி ஏற்பாடு!… post thumbnail image
மும்பை:-சென்னையில் ரஜினியை சந்தித்த பா.ஜ.க. பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி ரஜினியின் நடிப்பில் வெளியான ‘எந்திரன்’ படத்தை பார்த்த பிறகு அவரது ரசிகர்களில் ஒருவராக மாறி விட்டதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், ‘கோச்சடையான்’ படத்தை பார்க்க மோடி சமீபத்தில் விருப்பம் தெரிவித்ததாகவும், அவருக்கான சிறப்புக் காட்சிக்கு படக்குழுவினர் ஏற்பாடு செய்து வருவதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ரிலீசுக்கு ஒருநாள் முன்னதாக மே 8ம் தேதி மும்பையில் நடைபெறவுள்ள சிறப்புக் காட்சியில் இப்படத்தை நரேந்திர மோடிக்கு திரையிட்டு காட்ட முடிவெடுத்துள்ளனர். இந்த சிறப்புக் காட்சியில் அமிதாப் பச்சன், ஷாருக்கான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களும் படத்தைக் கண்டு ரசிக்கவுள்ளனர். இதற்கான ஏற்பாட்டை ‘கோச்சடையான்’ படத்தை வெளியிடும் மும்பை ஈரோஸ் இண்டர்நேஷனல் பிக்சர்ஸ் புரெடக்‌ஷன் நிறுவனம் செய்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இது தவிர, குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் மோடிக்காக இப்படத்தை திரையிட்டுக் காட்டப் போவதாகவும், இந்த சிறப்புக் காட்சியில் ரஜினி பங்கேற்க மாட்டார். படத்தின் இயக்குனர் சவுந்தர்யா அஷ்வின் இதில் பங்கேற்பார் என்று மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி