செய்திகள்,முதன்மை செய்திகள் மனித வரலாற்றில் மிகவும் கடினமான தேடல்!… மாயமான மலேசிய விமானம் குறித்து டோனி அபோட் கருத்து…

மனித வரலாற்றில் மிகவும் கடினமான தேடல்!… மாயமான மலேசிய விமானம் குறித்து டோனி அபோட் கருத்து…

மனித வரலாற்றில் மிகவும் கடினமான தேடல்!… மாயமான மலேசிய விமானம் குறித்து டோனி அபோட் கருத்து… post thumbnail image
கேன்பெர்ரா:-மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த மார்ச் 8ம் தேதி நடுவானில் மாயமானது. இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.

ஆஸ்திரேலியாவின் கேன்பெர்ரா நகரில் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் செய்தியாளர்கள் முன்பு பேசினார். அப்பொழுது அவர், இந்திய பெருங்கடல் பகுதியில் இன்று நடைபெறும் தேடுதல் வேட்டையில் விமான பாகங்கள் எதுவும் கிடைக்க கூடும்.
எனவே, மலேசிய விமான தேடுதல் வேட்டையானது புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, மனித வரலாற்றில் இது மிக கடினமான பணி என்று தேடுதல் வேட்டை குறித்து கூறினார். கடலுக்கு அடியில் புதிய தேடுதல் பணியானது இருக்கும் என்றும் அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி