செய்திகள்,திரையுலகம் இந்திய சினிமாவில் ‘கோச்சடையான்’ ஒரு மைல் கல்!… லதா ரஜினிகாந்த் பேட்டி…

இந்திய சினிமாவில் ‘கோச்சடையான்’ ஒரு மைல் கல்!… லதா ரஜினிகாந்த் பேட்டி…

இந்திய சினிமாவில் ‘கோச்சடையான்’ ஒரு மைல் கல்!… லதா ரஜினிகாந்த் பேட்டி… post thumbnail image
சென்னை:-ரஜினியின் கோச்சடையான் மே 9ம் தேதி உலகம் முழுவதும் 4000 தியேட்டர்களில் வெளியாகிறது என்று படத்தின் இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ரஜினிகாந்த் சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.இந்நிலையில் கோச்சடையான் படத்துக்கு நிதி நெருக்கடி உள்ள தென்றும் இதனால் ரிலீஸ் தாமதமாகும் என்றும் செய்திகள் பரவி உள்ளன. இதை தொடர்ந்து,படம் குறித்து ரஜினி மனைவி லதா கூறியதாவது:-

கோச்சடையான் படத்துக்கு நிதி நெருக்கடி உள்ள தென்றும் இதனால் ரிலீஸ் தாமதமாகும் என்றும் செய்திகள் பரவி உள்ளன. இது வதந்திதான். எல்லாம் சுமூகமாக போய்க் கொண்டு இருக்கிறது.உலகம் முழுவதும் மே 9ம் தேதி ரிலீசாகிறது.படம் வெளியாவதில் எல்லாமே நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. நான் முதல் நாளில் முதல் காட்சியை ரசிகர்களோடு அமர்ந்து பார்க்க உள்ளேன். இது எனக்கு சிறப்பான தருணம்
ஆறு மொழிகளில் கோச்சடையான் வருகிறது.இப்படம் மூலம் ஒரு வரலாறை நிகழ்த்தி உள்ளோம்.ஹாலிவுட் படமான அவதார் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது.அந்த அளவு செலவிட்டு நம்மால் படம் எடுக்க முடியாது.

ஆனாலும் அந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சி செய்துள்ளோம்.இதில் நேரம், செலவு ரஜினியை எப்படி காட்டுவது என்பதில் எல்லாம் பெரிய சவால்கள் இருந்தன. இந்த படத்தை எடுப்பது சவுந்தர்யாவுக்கு ஒரு சுமையாகவே இருந்தது.தந்தை மேல் நம்பிக்கை வைத்து எடுத்தார். 100 ஆண்டு இந்திய சினிமாவில் கோச்சடையான் ஒரு மைல் கல் படமாக இருக்கும்.ஹாலிவுட் படங்களை அவதார் படத்துக்கு முன்பு பின்பு என்பது போல் இந்திய படங்களை கோச்சடையான் படத்துக்கு முன்பு பின்பு என வகைபடுத்தலாம் என்றார். இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி