செய்திகள் மாயமான மலேசிய விமானம் கடலுக்கு அடியில் தேடும் பணி விரைவில் முடிவு!…

மாயமான மலேசிய விமானம் கடலுக்கு அடியில் தேடும் பணி விரைவில் முடிவு!…

மாயமான மலேசிய விமானம் கடலுக்கு அடியில் தேடும் பணி விரைவில் முடிவு!… post thumbnail image
பெர்த்:-மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8ம் தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.

இந்நிலையில் இந்திய 1100 கீமீட்டர் வடக்கில் தேடும் பணி நடைபெர்று வருகிறது புதிய தேடும் பகுதி 319000 சதூர கிலோமீட்டர் ஆகும் இது பெர்த்தின் மேற்கே 1850 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.கருப்பு பெட்டியை மீட்கும் முயற்சியில் 8 அமெரிக்க போர்விமானங்கள்,11 கப்பல்கள், தற்போது தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளன. .

விமான கருப்புப் பெட்டியை கண்டறியும் பிரத்யேக கருவியானது பிஙகர் லொகேட்டகேட்டர் கடந்த 8ந்தேதி 10 கிலோ மீட்டர் சுற்றளவில் கடலுக்கு அடியில் தேடுதல் பணியில் ஈடுபட்ட்து ஆனால் எதுவும் கிடைக்க வில்லை.அதுபோல் புளூபின்-21 நீர்மூழ்கி 10 கிலோமீட்டர் சுற்றளவில் ஆழ்கடலில் தேடுதல் வேட்டை நடத்தியது அதிலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.13-வது முறையாக புளூபின் -21 கடலுக்கு அடியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது மென்பொருள் பிரச்சினை காரணமாக திரும்பியது.கடலுக்கு அடியில் தேடும் பகுதி இறுதி கட்ட்த்தை நெருங்கி உள்ளது விரைவில் முடிவடையும் என தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி