செய்திகள்,திரையுலகம் பத்து நாட்களில் பத்து லட்சம் பார்வையாளர்களை யுட்யூபில் பெற்ற சந்தானம் நடிக்கும் படம்!…

பத்து நாட்களில் பத்து லட்சம் பார்வையாளர்களை யுட்யூபில் பெற்ற சந்தானம் நடிக்கும் படம்!…

பத்து நாட்களில் பத்து லட்சம் பார்வையாளர்களை யுட்யூபில் பெற்ற சந்தானம் நடிக்கும் படம்!… post thumbnail image
சென்னை:-நடிகர் சந்தானம் முதன்முறையாக கதாநாயகனாக நடித்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படம் விரைவில் வெளிவரவிருக்கிறது.ஏப்ரல் 14ம் தேதி வெளியான இப்படத்தின் முன்னோட்டம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

சமீபத்தில் வெளியான பட வரவுகளில் மிக அதிகஅளவில் வரவேற்கப்பட்ட முன்னோட்டம் இதுதான் என்கிறார்கள் திரையுலகினர்.கடந்த 14 ஆம் தேதி அன்று வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் முன்னோட்டம் யுட்யூபில் வெளியிடப்பட்டது முதல் பார்வையாளர்கள் எண்ணிக்கை பத்து நாட்களில் பத்து லட்சத்தையும் தாண்டி கொண்டிருக்கிறது.ஹீரோ சந்தானத்துக்கு கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு திரை உலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி