செய்திகள்,தொழில்நுட்பம் மாயமான மலேசிய விமானம் குறித்த அறிக்கை அடுத்த வாரம் வெளியாகும் என மலேசிய பிரதமர் தகவல்!…

மாயமான மலேசிய விமானம் குறித்த அறிக்கை அடுத்த வாரம் வெளியாகும் என மலேசிய பிரதமர் தகவல்!…

மாயமான மலேசிய விமானம் குறித்த அறிக்கை அடுத்த வாரம் வெளியாகும் என மலேசிய பிரதமர் தகவல்!… post thumbnail image
கோலாலம்பூர்:-மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8ம் தேதி நடுவானில் மாயமானது.இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.

இந்நிலையில் இந்திய 1100 கீமீட்டர் வடக்கில் தேடும் பணி நடைபெற்று வருகிறது புதிய தேடும் பகுதி 319000 சதூர கிலோமீட்டர் ஆகும் இது பெர்த்தின் மேற்கே 1850 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.கருப்பு பெட்டியை மீட்கும் முயற்சியில் 8 நாடுளின் 10 கப்பல்கள், 8 விமானங்கள், 49 ஆயிரம் சதுர கிலோமீட்டரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன.புளுபின்21-நீர்மூழ்கி மூலம் ஆழ்கடலிலும் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

விமான தேடுதல் குறித்து மலேசிய அரசு இதுவரை எந்த தகவலையும் வெளியிட வில்லை. இதனால் எம்எச் 370 விமான பயணிகளின் உறவினர்கள் அனைவரும் கோபத்தில் உள்ளனர். இதை தொடர்ந்து மலேசிய பிரதமர் நிஜாப் ரசாக் விமானம் காணாமல் போனதற்கான காரணம் அதை தேடும் பணி கூறித்த நிலவரம் குறித்து அறிக்கை அடுத்தவாரம் வெளியிடப்படும் என கூறி உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி