செய்திகள்,தொழில்நுட்பம் பெர்த்தில் சிதைந்த பாகம் கரை ஒதுங்கியது!… மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகமா என ஆய்வு…

பெர்த்தில் சிதைந்த பாகம் கரை ஒதுங்கியது!… மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகமா என ஆய்வு…

பெர்த்தில் சிதைந்த பாகம் கரை ஒதுங்கியது!… மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகமா என ஆய்வு… post thumbnail image
பெர்த்:-பெர்த்தில் சுமார் 2000 கி.மீ தொலைவில் பல்வேறு பாகங்கள் கடலில் மிதப்பதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்தது. ஆனால் அவற்றை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால் அந்த பகுதியில் கடலுக்கு கீழிருந்து சில சிக்னல்கள் கிடைத்தன. இது அந்த விமானத்தின் கறுப்பு பெட்டியிலிருந்து வந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
எனவே கறுப்பு பெட்டியையாவது கண்டுபிடிக்கலாம் என்று முடிவெடுத்த அமெரிக்கா தனது நீர்முழ்கி கப்பல் மூலம் கறுப்பு பெட்டியை தேட முயற்சி செய்தது. ஆனால் அந்த முயற்சியும் இதுவரை வெற்றியடையவில்லை.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள அகஸ்டாவிலிருந்து 10 கி.மீ தொலைவில் கார் அளவுள்ள ஒரு சிதைந்த பாகம் கரை ஒதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.இது காணாமல் போன விமானத்தினுடையதா என ஆய்வு செய்ய ஆஸ்திரேலிய அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி